உள்நாடு

‘நிலையான அரசாங்கம் இன்றேல் இலங்கை செயலிழக்கும்’

(UTV | கொழும்பு) – நிலையான அரசாங்கமொன்றை விரைவில் நிறுவத் தவறினால், இலங்கை செயலிழந்துவிடும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பிபிசிக்கு அளித்த பேட்டியில், அத்தியாவசிய எரிபொருள் இறக்குமதிக்கு பணம் செலுத்த அந்நிய செலாவணியை கண்டுபிடிப்பது ஒரு ஆபத்தான சூழ்நிலையாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் ஸ்திரமின்மை காரணமாக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற வேண்டிய கடன் தொகையை பெறுவது கூட தடைபடலாம் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மாதம் பெறப்படவுள்ள பல டீசல் மற்றும் பெட்ரோல் கப்பல்களுக்கு செலுத்த பணம் இருப்பதாகவும், ஆனால் அதற்கு அப்பால் பெரும் நிச்சயமற்ற நிலை நிலவுவதாகவும் கலாநிதி நந்தலால் வீரசிங்க வலியுறுத்துகின்றார்.

அப்படி நடந்தால் முழு நாடும் செயலிழந்து போகலாம் என மத்திய வங்கி ஆளுநர் கணித்துள்ளார்.

அவ்வாறானதொரு நிலை ஏற்படாத வகையில் ஜனாதிபதி-பிரதமர் மற்றும் அமைச்சரவை உருவாக்கப்பட வேண்டுமென கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

தமக்கு ஜனாதிபதியாகும் நம்பிக்கை இல்லை எனவும், எந்தவொரு அரசியல் பதவியையும் ஏற்கும் நம்பிக்கை தமக்கு இல்லை எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் இங்கு தெரிவித்தார்.

Related posts

பொதுப்போக்குவரத்து சேவைகள் தொடர்பில் இன்று முதல் விசேட கண்காணிப்பு

ஜனாதிபதி அமெரிக்கா நோக்கி பயணம்

 இன்றய (31.05.2023) வானிலை அறிக்கை