உள்நாடுபிராந்தியம்

நிலாவெளியில் முச்சக்கர வண்டியும் பட்டா ரக வாகனமும் மோதி விபத்து – ஒருவர் படுகாயம்

திருமலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருகோணமலை நிலாவெளி பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றும் பட்டா ரக வாகனமும் மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

ஜனாதிபதி அநுரவுக்கு ஆதரவளிக்கும் வகையில் அனைத்து அரிசி வகைகளுக்கும் கட்டுப்பாட்டு விலை

editor

வளிமண்டலவியல் திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

editor

மொத்த வியாபாரிகளுக்காக பேலியகொடை மீன் சந்தை திறப்பு