உள்நாடு

நிரூபமா ராஜபக்ஷவின் கணவர் இலஞ்ச ஆணைக்குழுவில்

(UTV | கொழும்பு) –  முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமரன் நடேசன், இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

உலகளாவிய ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்திய, பெண்டோரா ஆவணத்தில் திருக்குமரன் நடேசன் மற்றும் அவரது மனைவி நிரூபமா ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்நிலையில், குறித்த விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக, இலஞ்ச ஆணைக்குழுவின் அழைப்பின்பேரில் திருக்குமரன் நடேசன் குறித்த ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகியுள்ளார்.

Related posts

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் தொடர்பில் தீர்மானமில்லை

இலங்கை வரும் சீன தடுப்பூசி சீனர்களுக்கே

பொதுஜன பெரமுனவின் தேசிய பொது மாநாடு!