உள்நாடு

நிரந்தர நியமனம் தரக்கோரி கொழும்பில் போராட்டம்!

(UTV | கொழும்பு) –

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் பட்டதாரிகளுக்கு பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் பெற்றுத் தருவதாக கூறப்பட்டு ஒவ்வொரு துறைகளை தேர்ந்தெடுக்குமாறு பணிக்கப்பட்டுள்ளார்கள். அவ்வாறான சுமார் 22000 பேருக்கு கிராமப்புற பாடசாலைகள் வழங்கப்பட்டுள்ளன.
எனினும் தற்போது 3 வருடங்களுக்கு மேலாகியும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை எனவும், தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு வலியுறுத்தி குறித்த பட்டதாரிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேர் ஜனாதிபதியை சந்திக்க சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த நிலையில் ஏராளமான பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கலகத்தடுப்பு படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்றும் மின்வெட்டு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர பிரித்தானியா முடிவு

வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள வேண்டுகோள்