கிசு கிசு

சிறந்த குடிமகன் விருதுக்கு பென் ஸ்டோக்ஸ் பெயர் பரிந்துரை

(UTVNEWS|COLOMBO) – உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்த போதிலும் பென் ஸ்டோக்ஸ் பெயரை சிறந்த குடிமகன் விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது நியூசிலாந்து.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் பென் ஸ்டோக்ஸ்.

84 ஓட்டங்கள் எடுத்து போட்டி ‘டை’யில் முடிய முக்கிய காரணமாக இருந்தார். அதன்பின் சூப்பர் ஓவரிலும் இங்கிலாந்து 15 ஓட்டங்கள் சேர்க்க முக்கிய காரணமாக இருந்தார். இதனால் பென் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

நியூசிலாந்து அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சர்ச்சைக்குள்ளான இறுதிப் போட்டியின் சூழ்நிலையை சிறப்பாக கையாண்ட தலைவர் கேன் வில்லியம்சன் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Related posts

(VIDEO)-கர்ப்பிணியாக இருக்கும் இளவரசி மெர்க்கலுக்கு கிடைத்த முதல் பரிசு என்ன தெரியுமா?

கவர்ச்சி உடை சர்ச்சை: ரசிகருக்கு பதிலடி கொடுத்த ரகுல் ப்ரித்திசிங்

நாடளாவிய ரீதியாக திடீர் மின் தடை