வகைப்படுத்தப்படாத

நியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கி சூடு- ஆஸ்திரேலிய நபர் விளக்கமறியலில்

(UTV|NEW ZEALAND) நியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கி சூடு நடத்திய ஆஸ்திரேலிய நபரை ஏப்ரல் 5-ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு பள்ளிவாசல்களில் நேற்று நடத்திய  துப்பாக்கி சூட்டில் 49 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, கொலை குற்றம்சாட்டப்பட்ட பிரென்டன் டாரன்ட் என்னும் 28 வயதான ஆஸ்திரேலிய பிரஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அதையடுத்து, பிரென்டனை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 5ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேநேரம், குறித்த துப்பாக்கித் தாக்குதல் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேகத்துக்குரியவர்கள் கைது செய்யப்பட்டடு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் அவர்கள் மீது குற்றவியல் பதிவுகள் முன்வைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

NTJ Colombo District organizer granted bail

கேரளாவில் கனமழை காரணமாக நிலச்சரிவு

සිර දඬුවම් නියමවූ හිටපු නියෝජ්‍ය පොලිස්පතිට ඇප මත මුදාහැරේ