உலகம்

நியூசிலாந்து தாக்குதல்: சூத்திரதாரிக்கு ஆயுள் தண்டனை

(UTV|நியூசிலாந்து ) – 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி நியூசிலாந்தின் கிரைஸ்ட்சேர்ச்சிலுள்ள இருவேறு பள்ளிவாசல்களில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான பிரெண்டன் டெரண்டுக்கு (Brenton Tarrant) வாழ்நாள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் தீவிரவாத தாக்குதல் தொடர்பான தொடர் விசாரணைகள் கடந்த 24 ஆம் திகதி முதல் 4 நாட்களாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.

நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் நகரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 51 பேர் உயிரிழந்திருந்தனர்.

இரண்டு முக்கிய பள்ளிவாசல்களை இலக்குவைத்து இந்த தீவிரவாத தாக்குதல் இடம்பெற்றிருந்தது.

இதனை அடுத்து, பிரெண்டன் டெரண்ட் (Brenton Tarrant) கைது செய்யப்பட்டதுடன், அவர் மீது 51 கொலைக் குற்றச்சாட்டுகள், 40 கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் மற்றும் தீவிரவாத செயற்பாடு குறித்த குற்றச்சாட்டு ஆகியன சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நரேந்திர மோடியின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

இங்கிலாந்தில் 15 பிரதமர்களை கண்ட ராணி எலிசபெத்

தொடர்ந்தும் பலஸ்தீனை குறிவைக்கும் ஜெருசலேம்