விளையாட்டு

நியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் வெலிங்டனில் நடைபெறுகின்றது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி, முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 282 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்சை துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழப்பிற்கு 578 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணி சார்பாக டொம் லதெம் ஆட்டமிழக்காது 264 ஓட்டங்களை பெற்றுள்ளார். கேன் வில்லியம்ஸ் 91 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக லஹிரு குமார 4 விக்கெட்டுக்களை பெற்றார்.

இலங்கை அணி தற்போது இரண்டாவது இன்னிங்சை துடுப்பெடுத்தாடி வருகிறது.

 

 

 

 

Related posts

ஸிம்பாப்வே டெஸ்ட் அணியின் புதிய தலைவர் நியமனம் 

விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தக்கூடாத ஊக்கப் பதார்த்தங்களின் பட்டியல்

சவூதியில் முதல்முறையாக பெண்கள் கால்பந்து போட்டி