விளையாட்டு

நியூசிலாந்து அணி 178 ஓட்டங்களுக்கு சுருண்டது

(UTV|COLOMBO)-இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிரைஸ்ட் சேர்ச்சில் இன்று (26) ஆரம்பமானது.

நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன் அடிப்படையில் தமது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இலங்கை அணி சார்பாக சுரங்க லக்மால் 5 விக்கெட்டுக்களையும் லஹிரு குமார 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

நியூசிலாந்து அணி சார்பாக டிம் சௌத்தி அதிகூடிய ஓட்டங்களாக 68 ஓட்டங்களை பெற்றார்.

இந்நிலையில் தமது 1 ஆவது இன்னிங்சில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி சற்று முன்னர் வரை 2 விக்கெட்டுக்களை இழந்து 21 ஓட்டங்களை மட்டுமே பெற்றுள்ளது.

 

 

 

 

Related posts

நியூஸிலாந்து – இந்தியா: முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இந்தியா ராணுவ தொப்பி விவகாரம்-பாகிஸ்தான் குற்றச்சாட்டு

ஆட்ட நிர்ணய சதி 2011 – ஆதாரங்கள் வழங்கப்படவில்லை – ஐசிசி