வகைப்படுத்தப்படாத

நியுசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கி பிரயோகம்; துப்பாக்கி வைத்திருக்க கட்டுப்பாடு!

(UTV|NEW ZEALAND)  நியுசிலாந்து, Christchurch  நகரில் இரு பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் அங்கு பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க அமைச்சரவை கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து சட்டப்படி ஒருவர் 16 வயதிலேயே சாதாரண துப்பாக்கியையும், 18 வயதில் பகுதியளவு தானியங்கி துப்பாக்கியையும் வாங்க முடியும்.

எனவே, நாட்டில் நடைமுறையில் இருக்கும் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, துப்பாக்கி வாங்குவது மற்றும் வைத்திருப்பதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக பிரதமர் ஜெசிந்தா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், 10 நாட்களுக்குள் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட முடிவெடுக்கப்பட்டது. இந்த தகவலை பிரதமர் ஜெசிந்தா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். அதே சமயம் எந்த மாதிரியான திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்பதை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

 

 

 

Related posts

Murray and Williams wow Wimbledon again to reach last 16

இந்திய ஜனாதிபதி தேர்தல் ஆரம்பம்

அதிபர் டிரம்ப் ஜூலை மாதம் பிரிட்டன் செல்கிறார்