உலகம்

நியுசிலாந்தில் மீண்டும் கொரோனா

(UTV|நியூசிலாந்து )- நியுசிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்கள் மீண்டும் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

நியுசிலாந்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அண்மையில் தங்கள் நாட்டிலிருந்து கொரோனா வைரஸ் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று நியூசிலாந்து நாட்டில் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இதன்படி, அந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மொத்த எண்ணிக்கை 1,506 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இராஜினாமாவுக்கு தயாராகும் போரிஸ்

 பழைய smart phone களில் இனி whatsapp இயங்காது !

அரச மருத்துவமனையில் 111 குழந்தைகள் உயிரிழப்பு