உள்நாடு

நிமல் சிறிபாலவின் கட்சி வெளியேற்றத்தை தடுக்கும் உத்தரவு நீடிப்பு

(UTV | கொழும்பு) – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகள் மற்றும் பொறுப்புக்களில் இருந்து நீக்குவதைத் தடுத்து கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட மத்திய குழுவிற்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை நாளை வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், இந்த வழக்கை தீர்ப்பதற்கு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என நீதிமன்றில் தெரிவித்தனர்.

அவ்வாறு தீர்வு எட்டப்படாவிட்டால், தடை உத்தரவை நீடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தம்மிக்க பெரேரா இன்னும் இரு வாரங்களில் வரைபடத்தை சமர்ப்பிக்க உள்ளார்

“ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல்”

நாட்டின் கடல் எல்லையின் பாதுகாப்பு அதிகரிப்பு