உள்நாடுகேளிக்கை

நித்யா மேனனுக்கு கல்யாணமா?

(UTV |  இந்தியா) – மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான நித்யா மேனன், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘திருசிற்றம்பலம்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ’19(1)(a)’ படத்தில் நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் விரைவில் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதனிடையே நடிகை நித்யா மேனனுக்கும், மலையாள நடிகர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் என்ற தகவல் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவியது.

இதனை மறுத்துள்ள நித்யா மேனன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் “என் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளில் முற்றிலும் உண்மை இல்லை. இதுபோன்ற செய்திகளை வெளியிடும் முன் ஊடகங்கள் உண்மையை சரிபார்க்க முயற்சி செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நீர்கசிவு காரணமாக கடலில் மூழ்கும் MV Xpress pearl

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

சஜித் அணி சிரேஷ்ட எம்.பி ஒருவர் அரசாங்கதுடன்? மனைவி ஊடாக உறுதிப்படுத்தப்படுகிறது