உள்நாடு

நிதியமைச்சர் ரணிலை பதவி விலகுமாறு அமைச்சர் தம்மிக்க பெரேரா கோரிக்கை

(UTV | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்று காலை பத்தரமுல்லை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்;

நிதியமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் டொலர்களை உருவாக்கும் சகல வழிகளுக்கும் தடையாக இருப்பதாக அமைச்சர் பெரேரா குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர், நிதியமைச்சரின் 10 பொருளாதார ஆலோசகர்களுக்கும் ஊடகங்களில் வெளிப்படையான விவாதத்திற்கும் அவர் மேலும் சவால் விடுத்திருந்தார்.

நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் இல்லை என முன்னர் கூறிய பிரதமர் விக்ரமசிங்கவிற்கு எவ்வாறு தீர்வுகளை வழங்குவது என்பதை ஒவ்வொரு ஆலோசகருக்கும் காண்பிப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கடுமையான டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையை அவல நிலைக்கு தள்ள விடமாட்டோம் எனவும் அமைச்சர் தம்மிக பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.

வெளிப்படையாக விவாதத்திற்கு வருமாறு நிதியமைச்சருக்கு சவால் விடுத்த அவர், திட்டமிட்ட ஸ்கிரிப்ட் இல்லாமல் விவாதத்தில் ஈடுபடுவேன் எனவும் தெரிவித்தார்.

Related posts

“சுதந்திர தினத்தன்று ரஞ்சன் விடுதலையாவார்” – சஜித் [VIDEO]

காயங்களுடன் தாக்கப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

புதன் கிழமை முதல் பேரூந்து கட்டணத்தில் அதிகரிப்பு