சூடான செய்திகள் 1

நாளை(17) முதல் ஜனாதிபதி நிதியம் புதிய இடத்திற்கு இடம்மாற்றம்

(UTV|COLOMBO)-இலக்கம் 41, ரேணுகா கட்டிடம், ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01 என்ற முகவரியில் இயங்கிவரும் ஜனாதிபதி நிதியமானது 2019.01.18ஆம் திகதி முதல் புதிய முகவரியில் இயங்கவுள்ளது.

அதற்கமைய, இலக்கம் 35, மூன்றாம் மாடி, லேக்ஹவுஸ் கட்டிடம், டி.ஆர்.விஜயவர்தன மாவத்தை, கொழும்பு – 10 என்ற முகவரியில் ஜனாதிபதி நிதியம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

விரிவான, வினைத்திறனான மக்கள் சேவையை வழங்குவதற்காகவும் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக வருகைதரும் மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்தி தரும் நோக்குடனும் ஜனாதிபதி நிதியத்தை புதிய இடத்தில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 2019.01.18ஆம் திகதி சேவைகளை பெற்றுக்கொள்ள வருகை தரும் மக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்கள் தொடர்பிலும் வருத்தம் தெரிவிக்கப்படுகிறது.

2019.01.21ஆம் திகதி முதல் வழமைபோல் ஜனாதிபதி நிதியத்தின் சேவை வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறும் என்பதுடன், நிதியத்துடன் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கங்களில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அதற்கமைய 011-2331245, 011-2431610, 011-2382316 என்ற இலக்கங்களினூடாக ஜனாதிபதி நிதியத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

 

 

 

 

Related posts

ஓய்வு பெறும் நீதியரசர் ஈவா வணசுந்தர

சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் கடும் மழை

எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கும்