(UTV|மாத்தளை ) – நாளை(06) காலை 8 மணி தொடக்கம் பல்வேறு பகுதிகளுக்கு 24 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மாத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இடம்பெறவுள்ள அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாத்தளை மாநகர சபை, ஏ9 வீதியின் மாத்தளை தொடக்கம் பில்லிவெல வரையான பகுதிகள், பலாபத்வல பிரதேச சபை, ஓய கீழ் பிரிவு, கந்தகெதர மேல் பிரவு உள்ளிட்ட மாத்தளை நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இவ்வாறு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.