உள்நாடு

நாளை வேலைநிறுத்தம் அர்த்தமற்றவை – திலும்

(UTV | கொழும்பு) –  நாளை (28) நடைபெறவுள்ள தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பல்வேறு தரப்பினரும் நிறுவனங்களும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளன.

இதனால் எந்தவொரு பொதுப் போக்குவரத்திலும் தடங்கள் நிலை இடம்பெறாது என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

புகையிரத மற்றும் பேரூந்து தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி அதன் மூலம் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது வேலைநிறுத்தம் காரணமாக ஏழை மக்களே அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டின் தற்போதைய நிலையினை புரிந்துகொண்டு சில தீர்வுகளை எட்ட தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தன்னைப் போன்ற ஏழை மக்களை ஒடுக்குவதற்காக நடத்தப்படும் இந்த வேலை நிறுத்தங்கள் அர்த்தமற்றவை என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

கொட்டகலையில் மதுபானசாலை உடைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் வருண ராஜபக்ச மற்றும் மகேஷ் சேனாநாயக்க சஜித்துடன் இணைவு

editor

கொவிட் – 19 : உலகளவில் பாதிப்பு 16 இலட்சத்தை தாண்டியது