உள்நாடு

நாளை ரயில் சேவைகள் இடம்பெறாது

(UTV | கொழும்பு) –  இன்று (27) நள்ளிரவு முதல் நாளை (28) நள்ளிரவு வரை அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது.

புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கம், ரயில்வே மாஸ்டர்கள் சங்கம், லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் இன்ஜினியர் யூனியன், ரயில்வே ஊழியர் சங்கம், ரயில் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts

முச்சக்கரவண்டி, மோட்டார்சைக்கிள் சாரதிகளுக்கான அறிவித்தல்

2021 வரவு – செலவுத் திட்ட பாராளுமன்ற உரை ஆரம்பம் [LIVE]

ரஞ்சன் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு பிரமாணப் பத்திரம் தாக்கல்