உள்நாடுசூடான செய்திகள் 1

நாளை முதல் வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக அறிவிப்பு

(UTV|கொழும்பு) – நாளை(06) முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை வரை அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலப்பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா அபாய வலயங்களாக இனங்காணப்பட்டுள்ள கொழும்பு கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நடைமுறையிலிருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் நாளை(06) கலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்றைய தினத்திற்கான மின்வெட்டு

அதிகளவான பேருந்துகள் இன்று முதல் சேவைக்கு

VAT வரி அதிகரிப்பால் ஏற்படும் தாக்கம் – தனுஜா பெரேரா