வகைப்படுத்தப்படாத

நாளை முதல் மழை குறைவடையலாம்

(UDHAYAM, COLOMBO) – தற்போதைய மழையுடன் கூடிய காலநிலையில் நாளைமுதல் சிலதினங்கள் குறைவடையலாம் என்று வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மாவட்டத்திலும் நண்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு கரையோரப் பிரதேசங்களில் காலை நேரத்திலும் ஓரளவு மழை பெய்யக்கூடுமென்று திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலைஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பலத்த காற்றுடன் கூடிய இடி மின்னல் மழை நிலவுவதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related posts

மஹா மன்னார் நீர்வழங்கல் திட்டத்திற்கான சாத்திய வள ஆய்வு

A strong NO from EU to death penalty

Marilyn Manson joins “The Stand” mini-series