உள்நாடு

நாளை முதல் பேருந்துகளை இயக்க முடியாது

(UTV | கொழும்பு) – டீசல் தட்டுப்பாடு காரணமாக நாளை (07) முதல் பேருந்துகளை இயக்க முடியாது எனவும் எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு இந்நிலை தொடரும் எனவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் (05) பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் விநியோகிக்கப்படவில்லை எனவும் இதனால் நாளைய தினம் பெரும்பாலான பேருந்துகளை இயக்க முடியாது எனவும் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (06) முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக நேற்று (05) நண்பகல் 12.00 மணி முதல் இன்று நள்ளிரவு 12.00 மணி வரை பேருந்து சேவையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு இம்மாதம் 12ஆம் திகதி வரை தொடரும் என CPC அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்தும் டீசல் தட்டுப்பாடு நிலவி வருவதால், பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு டீசல் வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு போக்குவரத்து அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாததால், பேருந்துகளுக்கு தேவையான எரிபொருளை உரிய முறையில் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதுவரை.

Related posts

அரசியல் யாப்பு தயாரிக்கும் நடவடிக்கை குழு நாளை கூடுகிறது

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்!

ரயில் போக்குவரத்து தொடர்பில் வெள்ளியன்றே தீர்மானம்