சூடான செய்திகள் 1

நாளை முதல் பெண்களுக்கு தனியான இட வசதி

(UTV|COLOMBO) சர்வதேச மகளிர் தினத்துக்குஅமைவாக நாளை முதல் அலுவலக ஏழு ரயில்களில் பெண்களுக்காகரயில் பயணபெட்டிகள் பயன்படுத்தப்படும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரனதுங்க தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு பொது போக்குவரத்து சேவைகளில் அடிக்க இடம்பெறும் சிரமங்கள் மற்றும் தொல்லைகளிலிருந்து மீட்டெடுப்பதற்காக போக்குவரத்து அமைச்சர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இதற்கமைவாக காலை 6.30 மணிக்கு மீறிகம ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டைவரை சேவையில் ஈடுபடும் இலக்கம் 525 ரயிலிலும் ரம்புக்கணையில் நிலையத்திலிருந்து காலை 5.57 மணிக்கு கொழும்பு கோட்டையை நோக்கி பயணிக்கும் ரயிலிலும் பொல்காவலை ரயில் நிலையத்திலிருந்து காலை 5.25மணிக்கு கொழும்பு கோட்டைவரை செல்லும் ரயிலிலும் மஹவ ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயிலிலும் புத்தளம் ரயில் நிலையத்திலிருந்து காலை 4.50 மணிக்கு மருதானையை நோக்கிசெல்லும் ரயிலிலும் வங்கதெனிய ரயில் நிலையத்திலும் காலிரயில் நிலையத்திலும் காலை 5.00 மணிக்கு புறப்பட்டு மருதானை வரைசெல்லும் சமுத்திரா தேவி ரயிலிலும் மாத்தறை ரயில் நிலையத்திலிருந்து செல்லும் அலுவலக ரயில்களிலும் மகளிருக்கான ரயில் பயண பெட்டிகள் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதல் கட்டத்தின் கீழ் அலுவலக ரயில்களில் மகளிர்களுக்கான ரயில் பெட்டிகள் இணைக்கப்படுவதுடன் மகளிர்களுக்கு எதிர்காலத்தில் ஏனைய ரயில் சேவைகளிலும் இவ்வாறான பயண வசதிகள் செய்யப்படும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

தமிழ்மொழிச் சமூகங்களின் ஐயங்கள் யதார்த்தத்தின் இருப்புகளுக்கு ஆபத்து

தபால் மூலமான வாக்களிப்பு விண்ணப்ப காலக்கெடு நீடிப்பு [UPDATE]

முச்சக்கர வண்டிகளின் கட்டணத்திற்கு கட்டுப்பாடு அவசியம்