சூடான செய்திகள் 1

நாளை முதல் புகையிரத சேவைகள் வழமைக்கு

(UTV|COLOMBO) அனைத்து அலுவலக புகையிரத சேவைகளும் நாளை வழமை போன்று இடம்பெறும் என்று புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை இரவு தபால் புகையிரத சேவை நேற்று இடம்பெறவில்லை. பொலிஸ் ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருந்ததே இதற்குக் காரணமாகும். ஊரடங்குச்சட்டம் நீக்கப்பட்ட பின்னர் இரவு தபால் புகையிரத சேவை மேற்கொள்ளக்கூடியதாக இருக்குமென்று புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இருப்பினும், காலையில் இடம்பெறும் அனைத்து தூர இடங்களுக்கான புகையிரத சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் பெண் ஒருவர் கைது

தாதியர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில்

இன்று(14) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் விசேட சந்திப்பு