சூடான செய்திகள் 1

நாளை முதல் காலநிலையில் மாற்றம்

(UTV|COLOMBO) நாட்டில் மழையுடனான வானிலையில் நாளை(03) முதல் சற்று அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு, ஊவா, வடக்கு, மற்றும் வடமத்திய, மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் எனவும், சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

.

Related posts

02 கோடிக்கும் அதிக பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது

ஜனாதிபதி மைத்திரியை சந்திக்க மறுக்கும் மோடி?

08ம் திகதி ஐ.தே.கட்சியின் எதிர்ப்பு போராட்டம்