உள்நாடு

நாளை நெருப்பு வளைய சூரிய கிரகணம்

(UTV|COLOMBO) – எதிர்வரும் 26ம் திகதி காலை 8.36 மணிக்கு நெருப்பு வளைய சூரிய கிரகணம் தென்படவுள்ளது.

காலை சுமார் 8 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கி 10.30க்கு முழுமை பெற்று 1.33 மணிக்கு விலகும் என கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதன்போது நெருப்பு வளையம் போல சூரியன் காட்சி தரும். காலை சுமார் 8 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கும். கிழக்கு வானில் உதயமாகும் சூரியனின் மேற்பகுதியில் அதாவது சூரியனின் மேற்கு திசையில் முதலில் நிலவு மறைக்க தொடங்கும்.

அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சூரிய பிம்பம் மறைந்து பின்னார் சுமார் 11.16 மணி (காலை) வரையில் இவ்வாறு பிறைவடிவில் காட்சி தரும். அதன் பின்னர் கிரகணம் விலகி சூரியன் முன்பு போல முழுமையாகக் காட்சி தரும். இடையில் தான் சில நிமிடங்கள் வரை தீ வளையம் போல சூரியன் அற்புதமாகக் காட்சி தரும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் இரண்டு நிமிடம் வரை நெருப்பு வளையம் போல தென்படும் காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும். சூரியனின் நடுவில் பெரிய பொட்டு வைத்தது போல நிலவு கருமை பகுதி சூரியனின் மையத்தை மறைத்துக் கொள்ள விளிம்புப் பகுதி நெருப்பு வளையம்போலக் காட்சி தரும் எனவும் இதுவே வளைய சூரிய கிரகணம் அல்லது கங்கண சூரிய கிரகணம் என அழைக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சீன மருத்துவமனை கப்பலில் ஏறிய சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

பேலியகொட மீன் சந்தை பண மாற்றம் ஆன்லைன் முறையில்

கம்பளையில் காணாமல்போன Fathima Munawwara கொன்று புதைப்பு! CCTV VIDEO