உள்நாடுவிளையாட்டு

நாளைய போட்டியில் களமிறங்கவுள்ள ஆஸி அணியினர்

(UTV | கொழும்பு) – இலங்கை மற்றும் சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான அணியை ஆஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் பின்ச் இன்று (13) செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.

முன்னணி துடுப்பாட்ட வீரர் மார்னஸ் லாபுஷேனும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

அதன்படி நாளை (14) நடைபெறவுள்ள முதலாவது போட்டிக்கு;

டேவிட் வார்னர்
ஆரோன் பின்ச் (தலைவர்)
மார்னஸ் லாபுஷேன்
ஸ்டீவ் ஸ்மித்
அலெக்ஸ் கேரி
மார்கஸ் ஸ்டோனிஸ்
கிளென் மேக்ஸ்வெல்
ஆஸ்டன் அகர்
பாட் கம்மின்ஸ்
ஜெய் ரிச்சர்ட்சன்
ஜோஷ் ஹேசில்வுட்
ஆகிய வீரர்கள் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி நாளை (14) பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகல் இரவு போட்டியாக நடைபெறவுள்ளது.

Related posts

இலங்கை அணிக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் வாழ்த்து

வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.