உள்நாடுசூடான செய்திகள் 1

நாளைய தினம் மின்வெட்டு இல்லை

நாளைய தினம் (12) நாட்டில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தற்போதைய மின்சார தேவையை நிர்வகிக்க முடிந்ததால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் மின் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 3 மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்த நிலையில், மின்சாரத் தேவையை நிர்வகிப்பதற்காக இலங்கை மின்சார சபை நேற்றும் இன்றும் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒன்றரை மணி நேரம் மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, நேற்று பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 6 மணித்தியால காலப்பகுதியில் 4 பிரிவுகளின் கீழ் நாடு முழுவதும் ஒன்றரை மணி நேர மின்வெட்டு மேற்கொள்ளப்பட்ட நிலையில் அது இன்றும் நடைமுறைபடுத்தப்படவுள்ளது.

Related posts

குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரதிகள் இல்லை – ஆணைக்குழுவில் இருந்து வெளியேறல்

பல பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

மத்திய வங்கியின் சட்டப்பிரிவு பணிப்பாளரின் மகன் தற்கொலை