உள்நாடு

நாளைய தினம் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு 2 வருடம் பூர்த்தியடையும் எதிர்வரும் புதன்கிழமை நாளைய தினம் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக அன்றைய தினம் கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட தேவாராதனை நடைபெறவுள்ளது.

இவற்றுக்கு ஆகக்கூடிய பாதுகாப்பை வழங்குவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். இதுதொடர்பாக அனைத்து பிரதி பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியச்சகர்களின் தொகுதி, பொலிஸ் பிரிவின் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் இது தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மாணவர்களை குழுக்களாக பிரித்து கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கை

கொரோனா வைரஸ் – இலங்கையில் முதலாவது மரணம் பதிவாகியது

ரூபா 5000 : வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு முன்னுரிமை