உள்நாடு

நாளையும் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளையும் (04) நாடளாவிய ரீதியில் 6 மணி நேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, A முதல் L வரையிலான பிரிவுகளில் காலை 08.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை 5 மணி நேரமும், மாலை 06.00 மணி முதல் இரவு 10.30 மணி வரை 2 மணி நேரம் 15 நிமிடங்களும் மின் வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், P முதல் W வரையிலான பிரிவுகளில் காலை 08.15 மணி முதல் மாலை 05.45 மணி வரை 4 மணி நேரம் 45 நிமிடங்களும் மாலை 05.45 மணி முதல் நள்ளிரவு 10.45 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Related posts

தபால் மூல வாக்காளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

editor

SLFP சுயாதீனமாக செயற்பட தீர்மானம்