(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 37,631 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி, நேற்று(21) 370 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 06 பேர் வௌிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் எஞ்சிய 364 தொற்றாளர்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று ஒழிப்பிற்கான செயலணி குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 101 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 67 பேரும் கண்டி மாவட்டத்தில் 25 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவரும் அம்பாறை மாவட்டத்தில் 23 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 05 பேரும் யாழ். மாவட்டத்தில் 03 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் இருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களாவர்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,682 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2020/12/utv-news-5-1024x576.png)