(UTV | கொழும்பு) – இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்குவகிக்கும், முதலீட்டு ஊக்குவிப்பு சபைக்குட்பட்ட வர்த்தக வலயங்களிலுள்ள தொழிற்சாலைகளில் நாளாந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
முதலீட்டு சபையின் கீழுள்ள 14 வர்த்தக வலயங்களிலுள்ள தொழிற்சாலைகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதால் உற்பத்தியைத் தொடர முடியாதுள்ளதாகவும் சபையின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாளாந்த மின்வெட்டு காரணமாக, இந்த தொழிற்சாலைகளில் பலவற்றின் செயல்பாடுகள் சீர்குலைந்துள்ளதுடன், இதன் விளைவாக, நாட்டுக்கு முதலீட்டாளர் வருகையும் தடைபடுகிறது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வந்து முதலீடு செய்வதை நிறுத்தினால், வருடாந்தம் சுமார் 800,000 அமெரிக்க டொலர் பெறுமதியான ஏற்றுமதி வருமானத்தை இழக்க நேரிடும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
முன்வைக்கப்பட்ட அனைத்து காரணிகளையும் பரிசீலித்த மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, வர்த்தக வலயங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளுக்கு தற்போதைய மின்வெட்டை நீடிக்க வேண்டாம் என அறிவித்துள்ளார்.
நிலவும் வறட்சியான காலநிலை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக குறிப்பிட்ட வலயங்களில் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.