சூடான செய்திகள் 1

நாளாந்தம் 500-600 டெங்கு நோயாளர்கள் பதிவு

(UTV|COLOMBO)-நாளாந்தம் 500 முதல் 600 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3,743 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்தியநிபுணர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், யாழ். மாவட்டத்திலேயே அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் வட மாகாணத்தில் நிலவிய சீரற்ற வானிலையைத் தொடர்ந்தே, டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவியுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

பாராளுமன்றினை கலைப்பது தொடர்பிலான வர்த்தமானிக்கு எதிரான மனு மீதான விசாரணை நாளை(05) வரை ஒத்திவைப்பு

போலிய நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு