உள்நாடு

நாளாந்தம் ஒரு கோடி ரூபா நட்டத்தை எதிர்கொள்கிறது – இலங்கை போக்குவரத்து சபை.

(UTV | கொழும்பு) –

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் வருமானத்தை பகிர்ந்துக் கொள்வதால் சபை பாரிய நிதி நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. போக்குவரத்து சபை நாளாந்தம் 1 கோடி ரூபா நட்டத்தை எதிர்கொள்கிறது என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது இலங்கை போக்குவரத்து சபைக்கு கிடைக்கப் பெறும் நாளாந்த வருமானத்தை அரச பேருந்துகளின் சாரதிகளும்,நடத்துனர்களும் பகிர்ந்துக் கொள்கிறார்கள். இந்த நிதி மோசடியால் இலங்கை போக்குவரத்து சபை பாரிய நிதி நெருக்கடி எதிர்க்கொண்டுள்ளது.

சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் நிதி மோசடியால் இலங்கை போக்குவரத்து சபை நாளாந்தம் 1 கோடி ரூபா நட்டத்தை எதிர்க்கொண்டுள்ளது. இதுவும் ஒருவகையான அரச நிதி மோசடியே இந்த முறைகேடு குறித்து பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடளித்துள்ளேன். இந்த நிதி மோசடி குறித்து ஆராய 12 நடமாடும் சுற்றிவளைப்பு சேவைகளை செயற்படுத்துமாறு போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். அரச பேருந்துகளில் பயணிக்கும் போது பொது பயணிகள் நிச்சயம் பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். போக்குவரத்து சபைக்குள் இடம்பெறும் நிதி மோசடியை தடுக்காவிட்டால் இலங்கை போக்குவரத்து சபையை பாதுகாக்க முடியாது எநாவும் அவர் குறிப்பிட்டார் .

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

UPDATE – கிண்ணியா படகு விபத்தில் மாணவர்கள் உட்பட 6 பேர் பலி

14 மாதங்களில் 157% அதிகரித்துள்ள மின் கட்டணம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி அநுர வௌியிட்ட விசேட அறிவிப்பு

editor