அரசியல்உள்நாடு

நாம் அனைவரும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழவேண்டும் – நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்

புனித ரமழான் மாதத்தின் நிறைவை குறிக்கும் நோன்புப் பெருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் இந்நாளில், வடக்கு மாகாண மக்களுக்கும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ரமழான் மாதம் முழுவதும் நீங்கள் கடைப்பிடித்த நோன்பும், பக்தியும், இரக்கமும், சமூக ஒற்றுமையையும் விளக்குகிறது.

இத்தகைய நேரம் பகிர்ந்தளிக்கவும், ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கவும், சமூக ஒற்றுமையை வலுப்படுத்தவும் ஒரு அரிய சந்தர்ப்பமாக அமைகிறது.

நாம் அனைவரும் மகிழ்ச்சி, அமைதி, சகோதரத்துவம், மனிதாபிமானம் ஆகியவற்றை பேணிச் செலுத்தி, ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழவேண்டும்.

இந்தப் புனித நாளில் உங்கள் குடும்பங்களுக்குத் துன்பங்கள் நீங்கி, வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி நிலவிக்கண்டிட என் இருகரம் கூப்பி வாழ்த்துகிறேன்.

உங்கள் அனைவருக்கும் இனிய நோன்புப்பெருநாள் நல்வாழ்த்துக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க விசேட வைத்தியசாலைகள்

ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் மாத்திரமே ரயில் பஸ் சேவைகள்

நெல்மூட்டைகள்,பசளைகள் களஞ்சியசாலை உடைப்பு- சம்மாந்துறை பொலிஸார் விசாரணை