சூடான செய்திகள் 1

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

(UTV|COLOMBO) சட்டவிரோத நிதி மூலம் கவர்ஸ் கோப்பரேட் எனும் நிறுவனத்தில் முதலீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 07 ம் திகதிக்கு ஒத்தி வைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் சாட்சியாளர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது சேவையாளரான பாராளுமன்ற உறுப்பினர் இன்றைய தினம் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்க உள்ளதால் இன்றைய விசாரணையை ஒத்திவைக்குமாறு மன்றில் கோரிக்கை விடுத்தார்.

சட்ட விரோதமாக உழைக்கப்பட்ட 30 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி கவர்ஸ் கோப்பரேட் எனும் நிறுவனத்தில் முதலீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

அகதி முகாமிலிருந்து அலரி மாளிகை வரை; சோதனகளை சாதனைகளாக்கி வரும் யுக புருஷர்..!

அரச நிறுவனங்களை கணனி மயப்படுத்தும் வேலைத்திட்டம்

ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட செயற்குழு கூட்டம் இன்று