(UTV|INDIA) தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகளில், தமிழ் திரைப்பட பிரபலங்கள் தங்களது வாக்கினை ஆர்வமாக பதிவு செய்து வருகின்றனர்.
12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வியாழக்கிழமை காலை 07 மணி முதல் வாக்குபதிவுகள் இடம்பெற்று வருகின்றன.
அந்தநிலையில் ‘நான் வாக்களித்து விட்டேன் நீங்கள்?’ என இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இத்துடன், வாக்களித்தற்கு அடையாளமாக தனது விரலில் மையிட்டுள்ள ஒளிப்படம் ஒன்றினையும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Done
have you ? pic.twitter.com/vnj9UiYu8Y
— A.R.Rahman (@arrahman) April 18, 2019