உள்நாடு

நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன் – வடிவேல் சுரேஷ்

(UTV | கொழும்பு) –  நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன் – வடிவேல் சுரேஷ்

நான் சரியானதை மாத்திரமே செய்கிறேன். எனவே, நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் கடந்த புதன்கிழமை (மே 31) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியபோது, ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ள ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து ஜனாதிபதி வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவராக ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் சாகல ரத்நாயக்க, இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் சங்கத்தின் செயலாளர் வடிவேல் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அதன்போது “உங்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கேள்விப்பட்டேன். தற்போது இங்கு நீங்கள் வந்திருப்பதை அறிந்தால் என்ன செய்வார்கள் என்று தெரியாது” என ஜனாதிபதி வடிவேல் சுரேஷை நோக்கி கூறியுள்ளார்.

அதற்கு வடிவேல் சுரேஷ், “நான் யாருக்கும் அஞ்சமாட்டேன். சரியானதை மாத்திரமே செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த சந்திப்பில் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர்.

குறிப்பாக, மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது. அந்த மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி இதன்போது உறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மீண்டும் பணிப்புறக்கணிப்பு

ரயில் கட்டணம் அதிகரிப்பு

ஜனாதிபதி அநுரவுக்கு பூரண ஆதரவை வழங்க தயார் – IMF

editor