கேளிக்கை

நான் நடிகை, சமூக சேவகி இல்லை

(UTV|INDIA)-சமூக சேவகிபோல் படங்களில் நடிப்பதாக கூறுகிறார்கள். நான் சமூக சேவகி இல்லை, ஒரு நடிகை. சினிமாவை பயன்படுத்தி எனது கருத்துக்களை சொல்கிறேன் என்றார் நடிகை டாப்ஸி. இதுபற்றி அவர் கூறியது: பள்ளியில் படிக்கும் சிறுவயதிலிருந்தே இந்தியா மதசார்பற்ற, ஜனநாயகமான குடியரசு நாடு என்றுதான் படித்திருக்கிறோம். எல்லா மதமும் சமம் இன்னும் சொல்லப்போனால் அந்த முறையில்தான் நமது வாழ்க்கையும் சுற்றியுள்ள நண்பர்களையும் அமைத்துக்கொண்டிருக்கிறோம். வயது ஆக ஆக சில வெறுப்புணர்வுகளை காண்கிறோம்.

அதெல்லாம் பத்திரிகைகளில் படிக்கிறோம். அதை ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களிடம் பார்க்க முடிகிறது. அதுபோன்ற பிரச்னைகளை பற்றி ஒரு நடிகையாக என்னால் நடித்து காட்ட முடியும். அதற்கு சினிமாவை ஒரு கருவியாக பயன்படுத்திக்கொள்கிறேன். நான் சமூக சேவகி கிடையாது ஒரு நடிகை. எனது பார்வையையும். கருத்துக்களையும் வெளிப்படுத்த சினிமா சிறந்த சாதனம். எந்தவொரு விஷயத்தையும் போகிறபோக்கில் நான் பேசவில்லை. அதனால்தான் பெரும்பாலான மக்களிடம் கருத்துக்கள் சேரும் வகையில் நடிப்பை பயன்படுத்தி சொல்ல முற்படுகிறேன்.

ஒரு மனுஷியாக எந்த வொரு பண்டிகையை கொண்டாடவும். எந்தவொரு மதத்தினரிடமும் சேர்ந்து பழகவும் எனக்கு தயக்கம் இருந்ததில்லை. கிறிஸ்துமஸ், ஹோலி, ஈத் என எல்லா பண்டிகையும் கொண்டாடுவேன். சமீபகாலமாக சமூகவலைதளங்கள் வழியாக மக்களிடையே வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது. அது கவனத்தை ஈர்ப்பதாக அமைகிறது. நம்முடைய தவறான முடிவுகள் நம்மை விட்டு விலக வேண்டும். இவ்வாறு டாப்ஸி கூறி உள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வர்ம கலை கற்கும் காஜல் அகர்வால்

அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர்கள் யார் என்று தெரியுமா?

“ரூம்’ல தனியா விடாதீங்க.. நாம முழிச்சக்கணும்.. எனக்கும் 2 குழந்தைங்க ..” – கார்த்தி