அரசியல்உள்நாடு

நான் செய்யாத எதையும் சொல்ல மாட்டேன் – பாராளுமன்றத்தில் பொய்யர்கள் பெருகி வருகின்றனர் – நாமல் எம்.பி

பாராளுமன்ற சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்து பாராளுமன்றத்தில் பொய்யான அறிக்கைகள் வெளியிடப்படுவதைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அல்லாதுவிடின் அதைத் தடுக்க தனிநபர் உறுப்பினர் பிரேரணையைக் கொண்டு வருவேன் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

தவறான அறிக்கைகளை வெளியிட விரும்பாத அனைவரும் இந்த திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் பொய்யர்கள் பெருகி வருகின்றனர். ஏனென்றால் அந்தச் சலுகை கொடுக்கப்பட்டுள்ளது.

225 பேரில் எத்தனை பேர் பாராளுமன்றத்தில் பொய் சொல்வதை எதிர்க்கிறார்கள் என்று பார்ப்போம்.

நாம் உண்மையைப் பேசினால், நமக்கு அந்த உரிமை தேவையில்லை. எனக்கு அது வேண்டாம்.

நான் செய்யாத எதையும் சொல்ல மாட்டேன், என்னால் செய்ய முடியாத எதையும் சொல்ல மாட்டேன்.

பாராளுமன்றத்திலோ அல்லது வெளியிலோ வேறொருவரின் குணத்தை நான் படுகொலை செய்ய மாட்டேன். “மக்களை தவறாக வழிநடத்துபவர்கள் இதை எதிர்ப்பார்கள் என்றார்.

Related posts

ஷாஃபியின் நிலுவைத் தொகையை வழங்க சுகாதார அமைச்சகம் ஒப்புதல்

ஒரே நாளில் பதிவான அதிகூடிய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரானார் சனத் ஜயசூரிய

editor