உள்நாடு

நான்கு மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – நாட்டின் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா, கொழும்பு, கண்டி, களுத்துறை, மாத்தளை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவற்றில் கண்டி, மாத்தளை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு ஏற்படும் அபாய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது.

 

Related posts

“2023 வலிமிகுந்ததாக இருக்கும்” : IMF

நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட பாதுகாப்பு!

“அரசு தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சிகளை தோற்கடிப்போம்..”