சூடான செய்திகள் 1

நானும் பால் அருந்துகிறேன் ஆனால் எனக்கு அது விஷமாகியதில்லை

(UTV|COLOMBO)-உலகில் பல்வேறு நாடுகளில் தினசரி எரிபொருள் விலை மாற்றமடையும் சூழ்நிலையில் இந்நாட்டு மக்கள் சர்வதேச சமூகத்துக்கு இணக்கமான முறையில் வாழ வேண்டும் என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (11) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியில் நாட்டினுள் எவ்வித பிரச்சினைகளும் இல்லை என தெரிவித்த அவர், ஜனாதிபதி அடுத்த வருடம் எவ்வித தேர்தல்களையும் நடத்துவதில்லை எனவும் உரிய தினத்திலேயே தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பலம் கொழும்பிற்கு ஆர்ப்பாட்டத்தின் போது பால் பெக்கட்டுக்கள் விஷத்தன்மையடைந்தமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும் தானும் பால் அருந்துவதாகவும் இருப்பினும் இதுவரையில் இது போன்று எதுவும் நடந்ததில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இன்று (23) முதல் மாணவர்களை போதைப்பொருளிலிருந்து பாதுகாக்க திட்டம்

அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்

திட்டமிட்டபடி புகையிரத தொழிற்சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில்