உள்நாடு

நாட்டை 14 நாட்கள் முழுமையாக முடக்கத் தீர்மானம் இல்லை

(UTV | கொழும்பு) – நாட்டை 14 நாட்கள் முழுமையான முடக்கும் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், சமூக வலைத்தளங்கள் ஊடாக இவ்வாறான போலித் தகவல் பிரசாரம் செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

ஜுன் முதலாம் திகதி முதல் 14 நாட்கள் முழு நாடும் முடக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளம் ஊடாக பரப்பப்படும் தகவல் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற போலி செய்திகளுக்கும் வதந்திகளுக்கும் பொதுமக்கள் நம்பவேண்டாம் என்று ஜெனரல் ஷவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

தேர்தலில் ஜனாதிபதி ரணிலுக்கே ஆதரவு மொட்டு கட்சி எம்பி சந்திரசேன

உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக கலந்துரையாடல்

ஊரடங்கு சட்டத்தை மீறிய ஐவர் கைது