உள்நாடு

நாட்டை வந்தடையவுள்ள மற்றுமொரு உரக்கப்பல்!

(UTV | கொழும்பு) –   நாட்டை வந்தடையவுள்ள மற்றுமொரு உரக்கப்பல்!

நெற்பயிர்ச்செய்கைக்கு தேவையான மியூரியேட் ஒப் பொட்டாஷ் உரம் ஏற்றிய கப்பல் இன்று (03) இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

 

✔குறித்த கப்பலானது 41,876 மெற்றிக் தொன் அளவுடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் மேற்கொள்ளப்பட்ட நடவடிகைகளின் பின்னர், இன்று உரங்ளை இறக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக உர நிறுவனத்தின் தலைவர் ஜகத் பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த MOP உரத் தொகுதியை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு டிசம்பர் 05ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு துறைமுகத்தில் அமைச்சர் மற்றும் ஏனைய அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெரியவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசுக்கு சிவப்பு சமிஞ்சை

சபாநாயகரை சந்தித்தார் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமைக் கண்காணிப்பாளர்

editor

அகில இலங்கை இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவன் தெரிவு