உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டை மீட்க சம்மந்தன் , மனோ கட்சி அவசியம் – வஜிர அபேவர்த்தன

(UTV | கொழும்பு) –

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவு மிக முக்கியம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“நிலையானதொரு தேசிய வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உருவாக்கியுள்ளார்.

2048 ஆம் ஆண்டு வரை அந்த வேலைத்திட்டத்துடன் பயணிக்குமாறு ஜனாதிபதி கூறியுள்ளார். எனவே, பொருளாதார சமரில் வெல்வதற்கு எமக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட இந்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளினதும் ஆதரவு முக்கியமானதொன்றாகும்.” என தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐ.தே.கட்சியுடனான விசேட கலந்துரையாடல்

லோட்டஸ் வீதிக்கு பூட்டு

மஹிந்தவின் இராஜினாமா தொடர்பிலான ஊடக அறிக்கை