சூடான செய்திகள் 1

நாட்டை சரியான திசையில் கட்டியெழுப்புவதே எனது பிரதான இலக்கு – சஜித்

(UTV|COLOMBO) – இலஞ்ச, ஊழல் மோசடிகள், குற்றச் செயல்களை ஒழிப்பதற்காக சர்வகட்சிச் சபையொன்றை அமைத்து அதனை ஜனாதிபதி செயலணியுடன் இணைத்து இயங்க வைக்கத் திட்டமிட்டுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வர்த்தக சமூகத்திடம் தெரிவித்துள்ளார்.

நேற்று(18) இடம்பெற்ற வர்த்தக சமூகப் பிரதிநிதிகளுடனான இரண்டு மணி நேர சந்திப்பின்போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்;

“எனக்கு எந்தத் தரப்பினருடனும் முரண்பாடு கிடையாது. நாட்டை சரியான திசையில் கட்டியெழுப்புவதே எனது பிரதான இலக்காகும். நான் எந்தவொரு அழுத்தத்துக்கும் அடிபணியப் போவதில்லை. எனக்கு நிச்சயம் வெற்றி.

முதலில் நாட்டில் ஊழல், மோசடிகள் ஒழிக்கப்பட வேண்டும். குற்றச்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அண்மைக் காலங்களில் ஊழல், மோசடிகளில் ஓரளவு குறைவு காணப்பட்டாலும் அதன் பின்னணியில் செயற்பட்டவர்கள் இன்னமும் இயங்கிக்கொண்டேயிருக்கின்றனர். அவர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதில் நான் பதவிக்கு வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டங்களை மீறிச் செயற்படுவோர் மீது எந்தவித தயவு தாட்சண்யமும் காட்டமுடியாது. நாட்டை சுபீட்சமுள்ளதாக புதிய இலங்கையாக உருவாக்கும் எனது திட்டத்துக்கு தடைக்கல்லாகவிருக்கும் எந்தவித செயற்பாடுகளுக்கும் இடமளிக்கப்போவதில்லை..” எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

இன்று முதல் போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனம்

ஹொரண இறப்பர் தொழிற்சாலை முகாமையாளர் விளக்கமறியலில்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 462 ஆக உயர்வு