உலகம்

நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தப் போவதாக ஜோ பைடன் அறிவிப்பு

(UTV | அமெரிக்கா) – அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இன்னமும் முழுவதுமாக வெளியாகாத நிலையில், சமூக வலைத்தளங்களில் ஜனநாயகக்கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுக்கும், துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட கமலா ஹரிஸூக்கும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இத்துடன் அமெரிக்க நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு நாட்டுக்கு உரையாற்ற உள்ளதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

பென்சில்வேனியா நெவாடாவில் மற்றும் அரிசோனா ஆகிய மாநிலங்களில் ஜனநாயகக் கட்சியினருக்கு தொடர்ந்து சாதகமாக வாக்குகள் பதிவாகியதையடுத்து அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

அமெரிக்க தேர்தலில் பொதுவாக நவம்பர் 3 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் நிலையில் நவம்பர் 4 ஆம் திகதியே முடிவுகள் தெரிந்துவிடும் ஆனாலும் தற்போது தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ட்ரம்ப் நீதிமன்றில் மனு தாக்கல் செய்ததைதொடர்ந்து முக்கிய மாநிலங்களான பென்சில்வேனியா, ஜோர்ஜியா நெவேடா ,விஸ்கோஷ்ஸின், மிச்சிகன் போன்றவற்றில் வாக்குகளை எண்ணும் பணிகள் தாமதமாகியதுடன் மீள எண்ணும் பணிகள் நடந்து வருகின்றன.

எனினும் தற்போது வரை ஜோ பைடன் 253 ‘எலக்ட்டோரல் காலேஜ்’ உறுப்பினர்களின் ஆதரவுகளை பெற்றுள்ள நிலையில் 270 என்ற இலக்கை அடைய அவருக்கு இன்னும் 7 ‘எலக்ட்டோரல் காலேஜ்’ உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

இது இரு வழிகளில் சாத்தியமாகலாம், அவர் பென்சில்வேனியாவை வென்றால், அவர் 20 புள்ளிகளைப் பெறுவார், எனவே அரிசோனா அல்லது நெவாடா குறித்து யோசிக்க தேவையில்லை.

ஆனால் அவர் அரிசோனாவை வென்றால் – அதில் 11 “எலக்ட்டோரல் காலேஜ்’ உள்ளது. நெவாடாவிலும் வெற்றி பெற்றால் – 6 எலக்ட்டோரல் காலேஜ்’ உள்ளது – அவருக்கு பென்சில்வேனியா குறித்து யோசிக்க தேவையில்லை.

வெளியாகியுள்ள முடிவுகளின்படி, ஜோ பைடன் பென்சில்வேனியா -13371, நெவாடா – 20,137, அரிசோனா- 43,779 வாக்குகள் என்ற அடிப்படையில் முன்னனியில் உள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக்கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெறுவார் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஜோ பைடன் அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் போது அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக உப ஜனாதிபதி பொறுப்பை ஏற்கும் இந்திய வம்சாவளி பெண் என்ற வரலாற்றுச் சாதனையை கமலா ஹரிஸ் புரியவுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சீனாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 19 பேர் பலி

பொருட்களுக்கான வரிகள் மூன்று மடங்காக அதிகரிப்பு – சவூதி அதிரடி

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள எலான் மஸ்க்.