அரசியல்உள்நாடு

நாட்டு மக்களின் பாதுகாப்பை அரசாங்கம் பொறுப்பேற்கும் – அமைச்சர் ஆனந்த விஜேபால

நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது என சபையின் சுட்டிக்காட்டிய அமைச்சர் நீதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை என்றும் மாறாக அது பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது பாதாள உலக குழுக்களின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. மனித படுகொலைகள் நாட்டில் சாதாரணமாகிவிட்டது அந்த வகையில் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

ஆகவே, தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை தெளிவுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

“பாதாள உலக குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் நேற்று முன்தினம் (20) பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றினேன். அத்துடன் நீதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை.மாறாக அது பலப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றங்களின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாதாள உலக குழுக்களின் செயற்பாடுகள் மூலமே துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அண்மைக் காலமாக துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விசாரணையின் உள்ளடக்கத்தை பகிரங்கப்படுத்த முடியாது.

திட்டமிட்ட தரப்பினரால் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. பொதுமக்களின் பாதுகாப்பை அரசாங்கம் பொறுப்பேற்கும் தேசிய பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் கிடையாது” என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் திருத்தம்

பாராளுமன்றம் கலைப்பு தொடர்பாக விமல் கருத்து

2021வரவு செலவுத்திட்டம் – வாக்கெடுப்பு இன்று