உள்நாடு

நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசு பதவி விலக வேண்டும்

(UTV | கொழும்பு) – நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசாங்கம் பதவி விலக வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திற்கான இயலுமை இன்மையினாலேயே, நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காபந்து அரசில் இணையுமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நிராகரித்துள்ளதாக கட்சியின் அரசியல் அதிகார சபைக் கூட்டம் கடந்த 4ம் திகதி தெரிவித்திருந்தது.

கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் கொழும்பில் உள்ள கட்சித் தலைமையகத்தில், Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக, கடந்த (04) இந்த அவசரக் கூட்டம் ஏற்பட்டிருந்தது.

அரசாங்கம் விடுத்த அழைப்பை நிராகரிப்பதெனவும், பாராளுமன்றத்தில் இடம்பெறவிருக்கம் அவசரகால சட்டம் மீதான வாக்கெடுப்பின் போது எதிர்த்து வாக்களிப்பதெனவும் ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடி குறித்தும், மக்களின் போராட்டங்கள் தொடர்பிலும் இங்கு நீண்ட நீரம் ஆராயப்பட்டதாகவும் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், அரசியல் அதிகார சபைக் கூட்டத்தில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டதாக கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் தெரிவித்திருந்தார்.

Related posts

சிறுவர் மீதான வன்முறை முறைப்பாடுகள் அதிகரிப்பு

மூன்றாவது அலை வௌிநாடாக இருக்கலாம் என ஆரூடம்

பாடசாலை விடுமுறை தொடர்பான தீர்மானம்!