அரசியல்உள்நாடு

நாட்டுக்கு துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்க படுவார்கள் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

மக்கள் விரும்பாத எந்த ஒரு வேளைத்திட்டத்திட்டங்களையும் தேசிய மக்கள் சக்தி ஒரு போதும் முன்னெடுக்காது என பெருந்தோட்டம் சமுக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார் 31.01.2025. வெள்ளிக்கிழமை ஹட்டனில் உள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு புதிய பயிலுனர் மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார் இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்.

கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டமானது முறையாக முன்னெடுக்கப்படவில்லை கடந்த வீட்டுத்திட்டத்தில் பல்வேறு ஊழல்கள் இடம் பெற்றுயிருப்பதாக விசாரனைகளின் ஊடாக தெரியவந்துள்ளது அது மட்டுமின்றி கட்டுமான பணிகளிலும் பாரிய மோசடிகள் இடம் பெற்றுள்ளன இந்த 2025ம் ஆண்டு காலப்பகுதியில் 5400வீடுகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மலையக மக்களும் இந்த நாட்டில் கெளரவமான பிரஜைகலாக வாழ்வதற்கு எங்களுடைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்பட்டு கொண்டிருக்கிறது இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையக மக்களின் தீர்வுகள் குறித்து எங்களது பிரகடனத்தில் தெளிவாக கூறியிருக்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி பிரச்சினைக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் காரணம் கிடையாது கடந்த கால ஆட்சியாளர்களிடம் முறையான திட்டமிடல் இருக்கவில்லை இந்த அரிசி பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வுகள் வழங்கப்படும் இனிவரும் காலங்களில் அரிசி தட்டுபாடு என்பதற்கு பேச்சி கிடையாது.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக வலுவாக ஆராய்ந்து வருகின்றோம் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் மலையக மக்களுக்கு நல்லதொரு அறிவிப்பு வெளிவரும் தோட்ட தொழிலாளர்களுக்கு மாத சம்பளமாக வழங்கவும் நாம் பேச்சிவார்த்தை நடாத்தி வருகின்றோம் இதேவேளை தோட்ட தொழிலாளர்கள் கெளரவமாக வழகூடிய ஒரு சம்பளத்தை எமது அரசாங்கத்தின் ஊடாக பெற்றுக்கொடுப்போம்.

கடந்த கால மலையக அமைச்சர்கள் ஊடாக மலையக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கபடவில்லை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் வாடி வீடாக காணப்பட்டது அதனை நாங்கள் சுத்தப்படுத்தியிருக்கின்றோம் நாங்கள் தான் உண்மையாலும் தோட்டபகுதியில் இருந்து வந்தவர்கள் நாங்கள் தான் உண்மையான தலைமைத்துவத்தை வழங்குகிறோம்.

கடந்த காலங்களில் மக்களை அடிமையாக வைத்திருந்த அரசியலுக்கும் அரசியல் வாதிகளுக்கும் தற்போது முற்றுபுள்ளி வைத்துள்ளோம் மக்களின் வரிப்பணத்தை நாங்கள் ஒரு போதும் வீன்விரயம் செய்வதற்கு மக்கள் எமக்கு வாக்களிக்கவில்லை.

மலையக பெருந்தோட்ட பகுதியில் மாடி வீட்டுதிட்டம் குறித்து எமது அரசாங்கத்தின் ஊடாக எவ்வித தீர்மாணங்களையும் எடுக்கவில்லை கானி உருதிபத்திரதோடு தனி வீடுகள் அமைக்கப்படும் ஆகவே அரசியலில் ஒரம் கட்டப்பட்ட ஒரு சிலர் போலியான பிரச்சாரங்களை செய்து எம்மீது சேறு பூச முயற்சிகின்றனர்.

பொகவந்தலாவ கேசல்கமுவ ஒயா சுத்தப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் தொடர்பாக எமது அமைச்சின் ஊடாக விசாரனைகளை ஆரம்பித்துள்ளோம் கடந்த காலங்களில் கேசல்கமுவ ஒயாவிற்கு ஒதுக்கப்பட்ட நிதியிலும் மோசடி இடம்பெற்றுள்ளது ஊழல் செய்தவர்கள் மாத்திரமே தேசிய மக்கள் சக்தி மீது விமர்சனம் செய்து வருகிறார்கள் ஊழல் வாதிகள் சிறைக்கு செல்ல வேண்டும் மக்களுக்கு இருப்பதற்கு வீட்டு வசதிகள் இல்லாது இலட்ச்ச கணக்கான மக்கள் இருக்கின்ற போதிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் மாதத்திற்கு 46இலட்ச்சம் ரூபாய் வாடகை செலுத்தப்பட்டு மக்கள் பணம் வீன் விரயம் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே நாட்டுக்கு துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்க படுவார்கள் என்றார்.

-பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்

Related posts

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

பால் மா விலையும் உயரும் சாத்தியம்

திஸ்ஸ அத்தநாயக்க MP பயணித்த ஜீப் விபத்து – மூவர் காயம்