உள்நாடு

நாட்டில் HIV வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு..

(UTV | கொழும்பு) – கடந்த சில வருடங்களில் வேறு நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் புதிய எச்.ஐ.வி வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று சர்வதேச எயிட்ஸ் தினம் நினைவுக்கூறப்படும் நிலையில், அதற்கிணைவாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
சமத்துவமின்மையை ஒழிப்போம், எயிட்ஸ் நோயை ஒழிப்போம், தொற்று நோயை முறியடிப்போம் எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இலங்கையில் 2021ம் ஆண்டில் 363 எயிட்ஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், குறித்த எண்ணிக்கை 2021ம் ஆண்டில் 495ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொவிட் – 19 வைரஸ் தொற்று காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பயணத்தடை உள்ளிட்ட செயற்பாடுகளினால் எயிட்ஸ் நோயாளர்கள் தொடர்பான பரிசோதனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று மீண்டும் எரிபொருள் விலையில் திருத்தம்

நாம் ரணிலுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம் – பசில்

அத்தியவாசிய சேவையில் போதைப்பொருள் கடத்திய இருவர் கைது